மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், பணம் கொள்ளை
30-Nov-2024
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கூட்ரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர் ஆனந்தன் மகன் ஜெகதீஷ், 28; இவர், தியாகதுருகத்தில் நர்சிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த வாரம் பெங்களூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் மாலை ஜெகதீஷ் வீட்டை பூட்டி விட்டு, நண்பர்களுடன் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, வீடு புகுந்து நகை, பணம் திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
30-Nov-2024