உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் அருகே 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்

சின்னசேலம் அருகே 20 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்

சின்னசேலம்: வினைதீர்தாபுரம் கிராமத்தில் 20 சவரன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். சின்னசேலம் அடுத்த வினைதீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி சுகந்தி 34, இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். ஐயப்பன் சுகந்தி தம்பதியருக்கு 12, மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகள் படிப்பதற்காக சுகந்தி கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.இந்நிலையில் வினைதீர்த்தாபுரத்தில் உள்ள சுகந்தி வீட்டின் கதவுகள் உடைக்கபட்டுள்ளதாக நேற்று முன்னதின அதிகாலை 6 மணியளவில் அருகிலிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது சுகந்தியின் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி