உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கேபிள் டிவி ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது

கேபிள் டிவி ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது

தியாகதுருகம், -தியாகதுருகம் அருகே குடிபோதையில் கேபிள் டிவி ஆபரேட்டரைத் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் அடுத்த வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 45; கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது வீட்டிற்கு சகோதரி மகன் சுந்தர் தனது நண்பர்களுடன் கடந்த 17ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்திருந்தார்.அப்போது ஊரையொட்டி உள்ள சன்னியாசி கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு குடிபோதையில் வந்த அதே ஊரைச் சேர்ந்த செம்மலை மகன் அய்யப்பன், 30; ராமசாமி மகன் ஏழுமலை, 25; முருகேசன் மகன் அரவிந்த், 23; ஆகியோர் சுந்தரிடம் தகராறு செய்துள்ளனர். தட்டிக்கேட்ட ராஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து அய்யப்பன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை