| ADDED : பிப் 29, 2024 10:55 PM
திருக்கோவிலுார், - திருக்கோவிலுார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் முதுநிலை காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கடந்த 28ம் தேதி இரவு 11:40 மணியளவில் வடக்கு நெமிலி கூட்ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் மகன்கள் கவியரசன்,29; பிரசாத்குமார்,32; கண்ணன் மகன் பிரபாகரன்,30; ஆகியோர் சாலையின் நடுவே தார் டிண்ணை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து கேட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மூன்று பேரும் சேர்ந்து திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து முதுநிலை காவலர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து கவியரசன், பிரசாத்குமார், பிரபாகரன் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.