திருக்கோவிலுாரில் 36 மி.மீ., மழை பதிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன் அணைகள் உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளுக்கும் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி மி.மீ., அளவில் கள்ளக்குறிச்சி 7, தியாகதுருகம் 16, விருகாவூர் 7, கச்சிராயபாளையம் 2, கோமுகி அணை 17, மூரார்பாளையம் 12, வடசிறுவளூர் 15, கடுவனுார் 11, மூங்கில்துறைப்பட்டு 18, அரியலுார் 16, சூளாங்குறிச்சி 13, ரிஷிவந்தியம் 11, கீழ்பாடி 9, கலையநல்லுார் 10, மணலுார்பேட்டை 32, மணிமுக்தா அணை 20, வாணாபுரம் 17, மாடாம்பூண்டி 19, திருக்கோவிலுார் வடக்கு 36, திருப்பாலப்பந்தல் 16, வேங்கூர் 30, பிள்ளயைார்குப்பம் 17, எறையூர் 12, உ.கீரனுார் 27 என, மாவட்டத்தில் மொத்தம் 390 மி.மீ., மழை பதிவாகியது. சராசரியாக 16.23 மி.மீ., மழை பெய்துள்ளது.