உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை அபேஸ்

பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை அபேஸ்

சங்கராபுரம் : சங்கராபுரத்திற்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 5 சவரன் நகை வைத்தருந்த பர்ஸ் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி குப்பம்மாள், 55; இவர் நேற்று மாலை சங்கராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்ல ஆலத்துாரிலிருந்து சங்கராபுரத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார்.பஸ் நிலையத்தில் இறங்கி கைப்பையை பார்த்தபோது அதில் 5 சவரன் செயின் மற்றும் 1,500 ரூபாய் வைத்திருந்த மணி பர்ஸ் திருடு போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்;நகையை பறி கொடுத்த குப்பம்மாள் கதறி அழுதபடி காவல் நிலையம் வந்தவர் மயங்கி விழுந்தார். உடன், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ