உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில, தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாதனைகளை குவிக்கும் 7 வயது மாணவன்

மாநில, தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாதனைகளை குவிக்கும் 7 வயது மாணவன்

கள்ளக்குறிச்சி; மாநில, தேசிய அளவிலான செஸ் போட்டியில், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி மாணவன் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரைச் சேர்ந்த சதிஷ் -உமா ஆகியோரின் மகன் தமிழ் அமுதன்,7; இவர் கள்ளக்குறிச்சி ஜே.எஸ்.குளோபல் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 4 வயதில் இருந்தே செஸ் விளையாட்டி போட்டியில் திறம்பட செயல்பட்டு, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கோயம்புத்துார், திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த மாநில அளவிலான போட்டிகளிலும், கொல்கத்தா, பெங்களூரு, மைசூர் போன்ற பல்வேறு இடங்களில் நடந்த தேசிய போட்டிகளிலும் பங்கேற்று முதல், இரண்டாம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு வீரர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் பங்குபெறும் வகையிலான சர்வதேச ஓப்பன் செஸ் போட்டி நடந்தது. அதில் தமிழ்அமுதன் பங்கேற்று 7 வயது பிரிவில் முதலிடமும், 9 வயது பிரிவில் 2ம் பிடித்து பிடித்து வெற்றி பெற்றார். அதிக ரேட்டிங்குடன் உள்ள பல வீரர்களை வென்று 78.4 ரேட்டிங் புள்ளிகளை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கு நடந்த மாநில அளவிலான ரேபிட் சுற்றுக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிப்.,மாதம் நடக்கவுள்ள தேசிய போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க உள்ளார்.தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வீரர்களில் மாணவன் தமிழ் அமுதன் தொடர்ந்து தேர்வாகி தேசிய அளவிலான போட்டியில் விளையாடியுள்ளார். செஸ் போட்டியில் இதுவரை 50க்கும் மேற்பட்ட கோப்பைகள், பரிசுகள், சான்றிதழ், வாட்சுகள் மற்றும் பரிசுத் தொகை பெற்று தொடர் சாதனைகளை குவித்து வரும் மாணவன் தமிழ்அமுதனுக்கு பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !