உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 போலீசார் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 போலீசார் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் ஆகிய 3 இடங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு ஒரு ஆண்டாக பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் மற்றும் முதல்நிலை போலீசார் மாவட்டத்தில் உள்ள சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் மகளிர் காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவில் பணிபுரிந்த தலைமைக் காவலர் ரவி, செல்வம், ராஜசேகர், பாஸ்கரன் முறையே பகண்டைகூட்ரோடு, சங்கராபுரம், எடைக்கல் மற்றும் திருக்கோவிலுார் சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உளுந்துார்பேட்டை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவில் பணிபுரிந்த பாண்டியன், தனசேகரன், மாலா, ராமு முறையே திருப்பாலபந்தல், சின்னசேலம், உளுந்துார்பேட்டை மற்றும் மணலுார்பேட்டை சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய 3 காவல் நிலையங்களில் பணிபுரிந்த 25 தலைமைக் காவலர்கள், 4 முதல் நிலைக் காவலர்கள் என மொத்தம் 29 போலீசார் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல், வெவ்வேறு காவல் நிலையங்களில் தலைமைக் காவலர் நிலையில் உள்ள 48 பேர் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 77 போலீசார்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., மாதவன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை