உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு கள்ளக்குறிச்சியில் 792 பேர் பங்கேற்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு கள்ளக்குறிச்சியில் 792 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கள்ளக்குறிச்சியில் நடந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் 792 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதற்காக பள்ளியில் நான்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 1,208 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டது. காலை 9:30 மணிக்கு துவங்கி பகல் 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வில் 792 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 416 பேர் தேர்வில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகினர். மண்டல துணை தாசில்தார் பாஸ்கர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் மற்றம் மொபைல் கண்காணிப்பு குழுவினர் தேர்வினை கண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி