மேலும் செய்திகள்
வீட்டுமனை தகராறு 6 பேர் கைது
18-Dec-2024
இடத்தகராறு: இரு தரப்பினர் மீது வழக்கு
28-Dec-2024
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் இருதரப்பினர்க் கிடையை ஏற்பட்ட மோதலில் எட்டு பேருக்கு காயம். 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலூர் சைலோம், தாசர்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ஜகன்நாத், 49; அதே பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் அண்ணாதுரை, 58; நகர மன்ற உறுப்பினர். தங்கள் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் கட்டுவது தொடர்பாக, அரசு பணி செய்வதில் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில் திருக்கோவிலூர், ஐந்துமுனை சந்திப்பு அருகே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் அண்ணாதுரை அவரது மகன் ராமு, ஆதரவாளர்கள் சக்கரபாணி மகன் பாரதி, பாரதி மகன் டேவிட், ராஜ் மகன் வீரவேல், ரங்கநாதன் மகன் பிரேம்சுந்தர் ஆகியோர் ஜெகன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கினர். இதில் ஜெகன் அவரது தம்பி சங்கர்நாத் மற்றும் பிரேம், கோகுல் காயமடைந்தனர். ஜெகன் அவரது தம்பி சங்கர்நாத், அண்ணாமலை மகன் ராகவன், சிவலிங்க மகன் கோகுல் உள்ளிட்ட 11 பேர் திருப்பித் தாக்கியதில் அண்ணாதுரை, டேவிட், பாரதி, வீரவேல் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Dec-2024
28-Dec-2024