மேலும் செய்திகள்
மதுவிற்ற முதியவர் கைது
28-Sep-2024
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை நாளில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக போலீசார் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.அதில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த காரனுார் ராஜேந்திரன் மகன் நவீன்குமார்,25; கவிபாரதி,26; வெங்கட்டாம்பேட்டை கணேசன் மகன் ரமேஷ்,40; ஜோகிதர் தெரு ஆறுமுகம்,69; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அதேபோல் சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த வி.பி., அகரம் சேர்ந்த முருகேசனை,36; போலீசார் கைது செய்தனர்.மேலும் நேற்று முன்தினம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 6 வழக்குகள் பதிந்து 8 பேரை கைது செய்தனர்.
28-Sep-2024