உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உடைந்த உயரழுத்த மின்கம்பம் மாற்றிட நடவடிக்கை தேவை

 உடைந்த உயரழுத்த மின்கம்பம் மாற்றிட நடவடிக்கை தேவை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே உடையும் நிலையில் உள்ள உயரழுத்த மின்கம்பம், விபத்துக்கு முன் மாற்றிட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கராபுரம் செம்பராம்பட்டு கிராமத்தில் காட்டு வனஞ்சூர் கிராம எல்லையில் 137/4 எண் கொண்ட உயரழுத்த மின்கம்பம் மேல் பகுதி சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. மின்கம்பம் உடைந்து விழுந்தால், அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், போர்க்கால அடிப்படையில் உடைந்த மின் கம்பத்தை மாற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி