மேலும் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் மண் குவியல்
13-Sep-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உயர்மட்ட பாலத்தில் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருக்கோவிலுார் உயர்மட்ட பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். பாலத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சில மாதங்களுக்கு முன் வர்ணம் தீட்டி ரிப்ளக்டர் வைத்துள்ளனர். ஆனால் பாலத்தின் தடுப்புச் சுவர் ஓரத்தில் உள்ள மண் குவியல் அகற்றப்படாமல் உள்ளது.பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது மண் புழுதி பறக்கிறது. இதனால், பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் விழுவதால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், மழை பெய்தால், பாலத்தில் இருந்து மழைநீர் வடியும் இடத்தில் அடைப்பு ஏற்பட்டு பாலத்தில் தண்ணீர் தேங்குகிறது. எனவே பாலத்தில் குவிந்துள்ள மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Sep-2024