உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆடுதொடா, நொச்சி கன்று: விவசாயிகளுக்கு வழங்கல்

ஆடுதொடா, நொச்சி கன்று: விவசாயிகளுக்கு வழங்கல்

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் விவசாயிகளுக்கு ஆடுதொடா மற்றும் நொச்சி கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு வழங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.புவி வெப்பமடைதல், பருவமழையின் மாறுபாடுகள் காரணமாக பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி தெளிப்பதால் அதிக செலவாகிறது. ஆடுதொடா, நொச்சி செடிகளின் இலைகள் பூச்சிகளை விரட்டும் தன்மையுடையது. இதனை சிறந்த பூச்சி விரட்டியாக வயல்களிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் பயன்படுத்தலாம்.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக் கொல்லி பண்புகளுடைய பாரம்பரியத் தாவரங்கள் இலவசமாக வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகிறது.இதனை விவசாயிகள் வரப்பு ஓரங்களில் நடவு செய்து பயன் பெற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா கூறினார்.உதவி வேளாண் அலுவலர்கள் துரைராஜ், ரகுராமன், சந்திரமோகன் மற்றும் வினோத் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை