உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விழுப்புரம், கள்ளக்குறிச்சி பக்கத்திற்கு ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி பக்கத்திற்கு ஜே.எஸ்., குளோபல் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், பிளஸ் 2 பயின்ற மாணவர் பாஹிம் 94 சதவீத மதிப்பெண்களை பெற்று, பள்ளியில் சிறப்பிடம் பிடித்தார். அதேபோல், மாணவர் பாசில்பாஷா 92 சதவீத மதிப்பெண்களும், அணில்குமார் 91 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர்.அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் பிரக்குல், 95 சதவீத மதிப்பெண்ணுடன் சிறப்பிடம் பெற்றார். மாணவர் சுகந்த், 94 சதவீத மதிப்பெண்களும், மாணவி தானியா 93 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர். தொடர்ந்து, 3 ஆண்டுகளாக,10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று, பள்ளி சாதனை படைத்து வருகிறது.பள்ளி நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனி செந்தில்குமார் ஆகியோர் மாணவ, மாணவியரை வாழ்த்தினர். முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு ஆகியோர் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து, கவுரவித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை