உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அக்னிபாத் திட்ட தேர்வு விண்ணப்பம் வரவேற்பு

அக்னிபாத் திட்ட தேர்வு விண்ணப்பம் வரவேற்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்னிபாத் திட்டத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:இந்திய ராணுவத்தில் பல்வேறு பணியிடங்களில் சேர தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 22ம் தேதி கடைசி நாள்.இத்தேர்வு வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் நடக்கிறது. இதில் அக்னிவீர் ஜெனரல் பணி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் ஆபீஸ் அசிஸ்டண்ட், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டண்ட், சிப்பாயி பார்மா, ரிலிஜியஸ் டீச்சர், ஜூனியர் கமிஷன் ஆபீசர் உள்ளிட்ட காலி பணிடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.பயிற்சி காலத்தில் மாத ஊதியமும், பயிற்சி முடிவில் பட்டப்படிப்பிற்கு இணையான திறன் சான்றிதழும், அக்னிவீர் நிதியும் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை