மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
16 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
16 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
19 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
19 hour(s) ago
கள்ளக்குறிச்சி : அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் வரும் பிப்.௭ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:இந்திய ராணுவத்தால் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் வரும் பிப்ரவரி 6 ம் தேதிக்குள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.மார்ச் மாதம் 1௭ம் தேதி இணையதளம் வாயிலாக தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி 12ம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 3 ஆண்டுகள் டிப்ளமோ இன்ஜினியரிங் 50 சதவீதம் தேர்ச்சி பெற்று முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். ஆண்கள் உயரம் 152.5 செ.மீ., மார்பு விரியாத நிலை 77 செ.மீ., விரிந்த நிலையில் 82 செ.மீ., எடை, உயரம் வயதிற்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். பெண்கள் உயரம் 152 செ.மீ., எடை உயரம் வயதிற்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். மேலும் விபரங்களை https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.தேர்வு தொடர்பான விபரங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04151-295422 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
16 hour(s) ago
16 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago