உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேளாண் மாணவர்கள் வரைபட பயிற்சி

வேளாண் மாணவர்கள் வரைபட பயிற்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் வேளாண் மாணவர்கள் சார்பில் வரைபடம் மூலம் காலவரிசை குறித்து கிராம மக்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் அருள்ஜோதி, பவபிரியன், தருண், பிரசாத், தினேஷ், குமார் உட்பட 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சங்கராபரத்தில் தங்கி வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.நேற்று சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் மக்கள் தொகை அடிப்படையில் சமூக வரைபடம், வள வரைபடம், பருவ கால அட்டவணை, காலக்கோடு, பிரச்னை மரம் குறித்து ஆசிரியர்கள் யாதவ், பிரகாஷ், வி.ஏ.ஓ., கோமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ