வேளாண்மை சிறப்பு முகாம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே நடந்த வேளாண்மை சிறப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர் நலத்துறை சார்பிலான திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருக்கோவிலுார் அடுத்த வேங்கூர் ஊராட்சியில் காணொளி காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து 'உழவரைத் தேடி வேளாண்மை' திட்டம் செயல்படுத்தப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி வரவேற்றார். ஊராட்சித் தலைவர் அன்புமதி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் பேசினார். வேளாண் உதவி பொறியாளர் அறவாழி, கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் மேலாளர் ஜெயகாந்தன், ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி விவசாயிகளுக்கான இடு பொருட்களை வழங்கினர். தொடர்ந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.