மேலும் செய்திகள்
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
10-Jun-2025
சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், ராஜேந்திரன், அரசு இளந்தேவன், நகர செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பேரவை செயலாளர் கதிரவன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி திண்ணைப் பிரசாரம் செய்தனர். விவசாய பிரிவு சன்னியாசி, மருத்துவரணி பொன்னரசு, அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, துணை செயலாளர் உமாஜெயவேல், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள்.பிற அணி செயலாளர்கள் தங்க பாண்டியன், சீனிவாசன், ஜான்பாஷா, வினோத், பேரவை நிர்வாகிகள் அய்யம்பெருமாள், கோவிந்தன், வேணுகோபால், சம்பத், ராமதாஸ், செந்தில்குமார், வைத்தியநாதன், மணிகண்டன், ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். பேரவை செயலாளர் திருமால் நன்றி கூறினார்.
10-Jun-2025