உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

தியாகதுருத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர்., ன் 108 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தியாதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஷியாம்சுந்தர் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார்.சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் பாஷா, நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், அவைத்தலைவர் பச்சையா பிள்ளை, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மருத்துவ அணி துணை செயலாளர் பொன்னரசு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு, மாநில மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலு பாபு, தலைமை கழக பேச்சாளர் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் பிற அணி செயலாளர்கள் சீனுவாசன், தங்கபாண்டியன், வினோத், ராஜீவ்காந்தி, நிர்வாகிகள் ராஜவேல், கதிர்வேல், சாமிதுரை, அய்யம்பெருமாள், வேலுமணி, நம்பி, ஜெயச்சந்திரன், வரலட்சுமி, மூர்த்தி, பரியாஸ், மஞ்சமுத்து உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை