அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
சங்கராபுரம்: சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, துணைத் தலைவர் சர்புதீன் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அசோக்குமார், சீனுவாசன், சுதாகர், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் குசேலன் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் பேசுகையில், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது பற்றியும், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது.மற்றும் வணிக நிறுவனங்களில் கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்தும் பேசினார். மேலும் வியாபாரிகள் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் கடைக்கு சீல் வைக்கப்படும்.இருர சக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் குற்றமில்லா நகரமாக சங்கராபுரத்தை மாற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, தனசேகர், வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் செழியன், சேகர், நாசர், சீனுவாசன் பங்கேற்றனர். சாதிக்பாஷா நன்றி கூறினார்.