உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாதுார் பெருமாள் கோவிலில் ஆண்டாள் கனுபிடி உற்சவம்

பாதுார் பெருமாள் கோவிலில் ஆண்டாள் கனுபிடி உற்சவம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் அலர்மேல் மங்கா நாயிகா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டாள் கனுபிடி உற்சவம் நடந்தது.அதனையொட்டி, மார்கழி மாதம் முதல் தேதி முதல் நேற்று வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்து, ஆண்டாள் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.இறுதி நாளான நேற்று ஆண்டாள் சுவாமி சின்ன ஏரியில் கனுபிடி நடந்தது. காலை 5:00 மணியளவில் இருந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், தீபாரா தனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தோளுக்கினியன் புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன், சம்பத், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ