உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அண்ணாதுரை சைக்கிள் போட்டி : கலெக்டர் துவக்கி வைப்பு

அண்ணாதுரை சைக்கிள் போட்டி : கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாதுரை சைக்கிள் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கள்ளக்குறிச்சி சார்பில் அண்ணா சைக்கிள் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவிலும், மாணவியர்களுக்கு 10 கி.மீ. தொலைவிலும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவிலும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தொலைவிலும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவிலும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தொலைவிலும் தனித் தனியாக சைக்கிள் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இப்போட்டிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திலிருந்து துவங்கி கச்சிராயபாளையம் சாலை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 ம் இடம் வரை வெற்றி பெறுவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை