மாணவர்களுக்கு பாராட்டு விழா
உளுந்துார்பேட்டை; உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் சங்கம் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் வேலா கந்தசாமி தலைமை தாங்கி பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை பாராட்டிச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி கார்த்திகாயினி வரவேற்றார். தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ராஜவேல், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், நிர்வாகிகள் சூர்யா, மணிவேல், உதவி தலைமையாசிரியர் பாண்டியன், ஆசிரியர்கள் மோகன்ராம், பாண்டியன், பழனிசாமி, சுமதி, ரிஹானாபானு, கோதாவரி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் கோபால் நன்றி கூறினார்.