உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாணவர்களுக்கு பாராட்டு விழா

 மாணவர்களுக்கு பாராட்டு விழா

உளுந்துார்பேட்டை: ஜன. 2-: மாநில அளவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலத்தில் மாநில அளவிலான கராத்தே, பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற கிராமபுற மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிகரம் பவுண்டேஷன் சார்பில் பாராட்டி பரிசு வழங்கும் விழா நடந்தது. திருநாவலுார் சப்இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமை தாங்கினார். ஆதிசுரேஷ், ஆறுமுகம், சசிகுமார், நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி