உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் வரும் 10ம் தேதி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் நாளை மறுநாள் 10ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள், மின்வாரியம், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன தொழிற்சாலை, ஐ.சி.எப்., என்.எல்.சி., மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். என்.சி.வி.டி., மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டிஸ்சாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி, ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.9,600 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி 04146-294989 என்ற எண்ணிலும், விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம் 04146-290673 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை