மேலும் செய்திகள்
பணம் எடுத்து தருவதாக மோசடி செய்தவர் கைது
23-Jul-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏ.டி.எம்., கார்டினை மாற்றி கொடுத்து ரூ. 15 ஆயிரம் பணத்தை 'அபேஸ்' செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சோமசுந்தரம், 70; இவர், கடந்த 22ம் தேதி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்., மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த 45 வயது மதிக்கதக்க நபரிடம் ஏ.டி.எம்., கார்டு கொடுத்து, ரூ. 500 எடுத்து தருமாறு உதவி கேட்டார். மர்ம நபர் ஏ.டி.எம்., கார்டினை வாங்கி, பின் நம்பர் கேட்டு பதிவிட்டு ரூ.500 பணம் எடுத்து கொடுத்தார். அப்போது, மர்ம நபர் வேறு ஒரு ஏ.டி.எம்., கார்டினையும் சோமசுந்திரத்திடம் கொடுத்து அனுப்பினார். மறுநாள் 23ம் தேதி, கடலுார் மாவட்டம், பெரியசித்தாமூர் பகுதி ஏ.டி.எம்.,மில் சோமசுந்திரம் கார்டு பயன்படுத்தி அவரது வங்கியில் இருந்து ரூ. 15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சோமசுந்தரம், வங்கி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை 'அபேஸ்' செய்த மர்மநபரை தேடி வருகின்றனர்.
23-Jul-2025