மேலும் செய்திகள்
மரவள்ளி கிழங்கு விலை டன் ரூ.6,500 ஆக வீழ்ச்சி
10-Oct-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். ராஜேந்திரன், ராஜா, கருப்பன், ஸ்ரீதர், சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, பொருளாளர் ஆறுமுகம், துணைத் தலைவர்கள் நாகராஜன், தெய்வீகன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், ஒரு டன் மரவள்ளி கிழங்கிற்கு 16 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மரவள்ளியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் நஷ்டமடைந்த மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.மற்ற பயிர்களைப் போல் மரவள்ளிக்கும் பயிர் காப்பீடு செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, விவசாயிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
10-Oct-2024