உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே, போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடகம், கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் சிவசக்தி, சம்ஷத்பேகம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் ஏழுமலை வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அமிர்தா சிவாணி பங்கேற்று போதை பொருள்தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஓவிய ஆசிரியர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை