ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., சத்யராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.