உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தெய்வானை துரை, ஊராங்கனி ஊராட்சி தலைவர் மல்லிகா சின்னதம்பி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணா அறிவுமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் இளையராஜா வரவேற்றார். எஸ்.வி.பாளையம் ஊராட்சி தலைவர் தனக்கோட்டி விழிப்புணர்வு பேரணியை கொடியைசத்து துவக்கி வைத்தார். பேரணியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஆசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை