உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பேக் கடைக்காரர் சாலை விபத்தில் பலி

பேக் கடைக்காரர் சாலை விபத்தில் பலி

சங்கராபுரம்:அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பேக் கடை உரிமையாளர் இறந்தார்.சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்,40; இவர், அதே பகுதியில் 'பேக்' கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் மூரார்பாளையத்தில் இருந்து சங்கராபுரத்திற்கு சென்றார். மேலேரி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. அதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு சத்யா,35; என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !