உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பங்காரம் லஷ்மி கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம்

பங்காரம் லஷ்மி கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம்

கள்ளக்குறிச்சி : பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த ரத்த தான முகாமிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் வரவேற்றார். சின்னசேலம் லயன்ஸ் கிளப் தலைவர் சிவக்குமார், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அதிகாரிகள் விஜயகுமார், மருத்துவ அதிகாரி கோகுலவாணி, தொட்டியும் அரசு ஆரம்ப சுகாதார மைய சுகாதார அதிகாரி அசலாம்பாள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லுாரி மாணவர்கள் 50 பேர் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் செய்திருந்தார். கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை