உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிவதுர்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்

சிவதுர்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, சிவதுர்கை அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று முன்தினம் சிவதுர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபராதணை காண்பிக்கப்பட்டது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. சுமங்கலி பூஜை நடத்தி வளையல் மற்றும் மஞ்சள் மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோவில் அர்ச்சகர் சட்ட கணேசன் பூஜைகள் செய்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி