தடுப்பணை ெஷட்டர் மாயம்; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் உள்ள முஷ்குந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்த ெஷட்டர் மாயமானதை கண்டித்து அப்பகுதி மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் செல்லும் முஷ்குந்தா ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி மூலம் லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ்சிப்பட்டு, பிரம்மகுண்டம், வட கீரனுார், வடபொன்பரப்பி, மேல்சிறுவலுார், உலகலாம்பாடி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் செல்லும்.அதேபோல் மற்றொரு பகுதியில் புதுப்பட்டு, புதுப்பேட்டை, ராவத்தநல்லுார், மூக்கனுார் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் செல்கின்றன.நேற்று முன்தினம் முஷ்குந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் நடுவே இருந்த ெஷட்டரை விஷமிகள் கழற்றிச் சென்றுள்ளனர். இதனால், பவுஞ்சிப்பட்டு ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது.இதனை கண்டித்து பவுஞ்சிப்பட்டு பகுதி மக்கள் முஷ்குந்தா ஆற்றின் நடுவே உள்ள தடுப்பணையில் நின்று கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த நீர்வளத்துறை துணை பொறியாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ெஷட்டரை கழற்றிச் சென்றவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.பின், பவுஞ்சிப்பட்டு ஏறிக்கு நீர் செல்ல ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.