சின்னசேலம் கோவிலில் பரணி தீபம்
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரணி தீப பெருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, உட்பிரகாரத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. குழு தலைவர் அகிலா, நிர்வாகிகள் பரிமளா, ஜெயந்தி, சுகன்யா, ஹேமலதா, கவிதா, மீனா, மகாலட்சுமி, ஆண்டாள், அபிநயா ஆகியோர் விழாவை நடத்தினர். கோவிலில் இன்று மாலை 6:00 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றப்படுகிறது. ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.