மேலும் செய்திகள்
துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு
14-Oct-2025
உளுந்துார்பேட்டை: பின்னல்வாடியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த பின்னல்வாடியில் 73.43 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 1.15 கோடி மதிப்பில் 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 23 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 162 மின் மாற்றிகள் அமைக்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ராஜவேல், நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் பழனிராஜ், மேற்பார்வை பொறியாளர் பாரதி, மேற்பார்வை பொறியாளர் ( கட்டுமானம்) மேரிமெட்டிலின் பிரீன்சி, செயற்பொறியாளர்கள் மயில்வாகனம், கணேசன், சுப்புராஜ், ரகுராமன், திலகர், ஊராட்சி தலைவர்கள் நந்தகுமார், மணி, துணை தலைவர் சம்ஷாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
14-Oct-2025