உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த பைக் மாயமாகியது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 46; ஆம்புலன்ஸ் டிரைவர். இவர், கடந்த 25ம் தேதி தனது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கினை கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் நிறுத்தி விட்டு, பணிக்கு சென்றார். மறுநாள் (26ம் தேதி) காலை பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது. இது குறித்து முத்துசாமி அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை