உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொரசக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொரசக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ரமேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் துரைசாமி புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசினார். இதில் மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் தேவசந்திரகுமார், மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் நாராயணன், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் ராஜசேகர், நிர்வாகிகள் கொளஞ்சி, தங்கவேல், ரங்கநாதன், பபிதாரோஜா, ஷீலா ராஜேஸ்வரி உட்பட் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை