உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ.,புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்

பா.ஜ.,புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பா.ஜ., புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்ததிற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், குமரவேல், பொருளாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சர்தார் வரவேற்றார்.கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.,வில் 2 லட்சத்து 40 ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் கஜேந்திரன், கருணாகரன், கிருஷ்ணவேணி, வெண்ணிலா, பிரகாஷ், ரமேஷ், விவசாய அணி மாவட்ட தலைவர் மோகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை