உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு

பாதாள சாக்கடை பைப் லைனில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப் பணியில், பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், உளுந்துார்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 38.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், 3.5 கி.மீ., துாரத்திற்கு பைப் லைன் அமைக்கப்பட்டது. இதில் தெரு பகுதிகளில் இருந்து கழிவு நீரானது, 6 நீரேற்று நிலையங்கள் மற்றும், 2 நீர் உந்து நிலையங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, சேலம் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பிறகு மாசு நீக்கப்பட்ட அந்த நீரானது கீரனுார் ஏரியில் விடப்படுகிறது. கழிவுநீரை வெளியேற்ற, 2000க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பைப் லைன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தற்போது அடைப்பு ஏற்பட்டுள்ளதால், உளுந்துார்பேட்டையின் பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு உரிய இயந்திரங்களோ, வாகனங்களோ தற்போது வரை நகராட்சி நிர்வாகம் வாங்காமல் உள்ளது. அதனால் இதற்கான உபகரணங்களை வாடகைக்கு எடுத்து கழிவு நீர் அடைப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீரால் துர்நாற்றமும், தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது. அதனால் இந்த பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை