உள்ளூர் செய்திகள்

ரத்ததானம் முகாம்

திருக்கோவிலுார் : வருவாய் துறை தினத்தை முன்னிட்டு திருக்கோவிலுார் தாலுக்கா அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. தாசில்தார் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சப்கலெக்டர் ஆனந்த்குமார் சிங் தலைமை தாங்கி, ரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த தானம் பெற்றனர். ரத்த தானம் வழங்கிய 25 வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், சங்கரன், பூபதி மற்றும் வருவாய் துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை