உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி திருமணம் வாலிபர் கைது

சிறுமி திருமணம் வாலிபர் கைது

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் பிரபு, 21; இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதில் சிறுமி 9 மாத கர்ப்பிணியானார். இது குறித்து விழுப்புரம் குழந்தை நல அலுவலர் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ