உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சிக்கொல்லி மருந்து குடித்து சிறுவன் பலி

பூச்சிக்கொல்லி மருந்து குடித்து சிறுவன் பலி

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த எலவாடி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் யுவன், 10; இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, விவசாய நிலத்தில் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கினார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ