உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்டையில் விழுந்து சிறுவன் பலி

குட்டையில் விழுந்து சிறுவன் பலி

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே குட்டையில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த பெரியபகண்டை காலணியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரதீஷ், 6; அதே பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார். பிரதீஷ் நேற்று மாலை 6:00 மணிக்கு, அவரது நண்பர்களுடன் ஏந்தல் ஏரி குட்டை பகுதியில் விளையாட சென்றார். அப்போது பிரதீஷ் ஏரி குட்டையில் தவறி விழுந்து சகதியில் சிக்கி இறந்தார். தகவல் அறிந்த அப்பகுதியினர் இறந்த நிலையில் சிறுவன் பிரதீஷ் உடலை மீட்டனர். இது குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை