உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் உண்டியலை உடைத்து தீ வைப்பு

கோவில் உண்டியலை உடைத்து தீ வைப்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் சுவாமி துணிகளுக்கு தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் ஏரி கரையில் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே விவசாய பயிர் செய்து வரும் ஏழுமலை, கோவிலில் இருந்து புகை வருவதை கண்டு அங்கு சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுவாமி புடவை, துணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை