உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் கைது

மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் கைது

கள்ளக்குறிச்சி: ரங்கநாதபுரம் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரத்தில் உள்ள மாசியாயி கோவில் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், 80; இவரது அண்ணன் வீரமுத்து, 82; ஆகிய இருவரும் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி