உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.10.74 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.10.74 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று 10.74 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள் 110 மூட்டை, மக்காச்சோளம் 100, மணிலா 14, கம்பு 5, உளுந்து ஒரு மூட்டை என 229 மூட்டை விளை பொருட்களை விற்பனைக்கு வந்தது.எள் மூட்டை சராசரியாக 6,949 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,417, மணிலா 6,900, கம்பு 2,373, உளுந்து 4,550 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக நேற்று ஒரு நாள் மட்டும், 10 லட்சத்து 74 ஆயிரத்து 561க்கு வர்த்தகம் நடந்தது.இதேபோல், சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 30 மூட்டை, எள், மணிலா தலா 10, வரகு 3 மூட்டை என 53 மூட்டை விளை பொருட்கள் கொண்டுவரப்பட்டது.இங்கு, சராசரியாக மக்காச்சோளம் 2,430 ரூபாய், எள் 9,741, மணிலா 9,061, வரகு 2109 ரூபாய் என 2,67,247 க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் நெல் 320 மூட்டை, எள் 35, மக்காசோளம் 16, கம்பு 10 மூட்டை என மொத்தம் 381 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்கு வந்தது. சராசரியாக நெல் 2,420 ரூபாய்க்கும், எள் 8,400, மக்காசோளம் 2,350, கம்பு 2,525 ரூபாய்க்கு என 7,25,243 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !