உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே பைக் மீது கார் மோதியதில் முதியவர் இறந்தார்.சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி, தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நேரு, 58, இவர், கடந்த 20ம் தேதி உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.ராயர்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் நேரு படுகாயமடைந்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று அதிகாலை இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ